தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு உதவுவதற்காக நிதி உதவி வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
உக்ரைனுக்கு 723 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்குவதற்கு உலக வங்கி அனுமதியளித்துள்ளது.
தொடர்ந்து வரும் மாதங்களிலும் மேலும் 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி அளிக்கப்படவுள்ளதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் உக்ரைன் மக்கள் இடம்பெயர்ந்துள்ள அண்டை நாடுகளுக்கும் நிதி உதவி அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உக்ரைனுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிப் பொருட்கள் வழங்கப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.