உக்ரைன் - ரஷ்ய மோதல்கள் ஆரம்பமான இரண்டொரு தினங்களில் ரஷ்ய அதிபர் அணு ஆயுதங்கள் பற்றிக் கோபத்துடன் பேசிய காட்சியில் ரஷ்ய அதிபரின் உடல் மொழியை ஆராய்ந்தார்கள் உடல் மொழி வல்லுனர்கள்.
அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் பொழுது, உக்ரைனில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற எதிர்த்தாக்குதல்கள், ரஷ்யாவுக்கு எதிரான மேற்குலகின் எழுச்சி போன்ற எதிர்வினைகளால் ரஷ்ய அதிபருக்கு ஏற்பட்டுள்ள 'விரக்தியை' அவரது உடல் மொழி வெளிப்படுத்துவதாகத் தெரிவிக்கின்றார்கள் உடல் மொழி வல்லுனர்கள்.