இசைஞானி இளையராஜா தற்போது துபாயில் நடந்துவரும் எக்ஸ்போ 2020 ஷோவில் சமீபத்தில் கச்சேரி நடத்தினார். அதன் வீடியோவும் இணையத்தில் வெளியாகி இருந்தது. இளையராஜா இசையை கேட்க அதிக ரசிகர்கள் வந்திருக்கிறார்கள்.
அதன் பின் இளையராஜா துபாயில் இருக்கும் ஏஆர் ரஹ்மானின் ஸ்டூடியோவுக்கு சென்று இருக்கிறார். அவரை வரவேற்று ஸ்டூடியோ முழுவதையும் ரஹ்மான் சுற்றி காட்டி இருக்கிறார். இசைஞானி உடன் எடுத்துக்கொண்ட போட்டோவை ட்விட்டரில் ரஹ்மான் வெளியிட அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
தனது ஸ்டூடியோவுக்காக இளையராஜா ஒரு பாடல் இசையமைக்கவேண்டும் என ரஹ்மான் கோரிக்கை ஒன்றையும் ட்விட்டரில் வைத்து இருந்தார். அதற்கு பதில் கூறி இருக்கும் அவர் ரஹ்மானின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருப்பதாக கூறி உள்ளார்.