உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது.
இதனால், ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இப்போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து, மாணவர்கள் பலர் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி அவரவர் நாடுகளுக்கு திரும்பி வருகிறார்கள். தற்போது, உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல நாடுகளில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பு பலரால் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அயர்லாந்து நாட்டில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு வந்த ஒருவர் ரஷ்ய தூதரக கதவுகளை ட்ரக்கால் மோதி இடித்துத் தள்ளினார். இதன் பிறகு, ரஷ்ய தூதரை நாட்டை விட்டு வெளியேற்றும்படி கோஷமிட்டார்.
இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
ரஷ்ய தூதரக கதவுகளை இவர் ட்ரக்கால் மோடி இடித்துத் தள்ளியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.