மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனையின் குழந்தையுடன் இந்திய வீராங்கனைகள் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் நிலையில் தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை நேற்று எதிர்கொண்டது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 244 ரன்கள் எடுத்தது.
245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், போட்டியில் பங்கேற்க வந்த பாகிஸ்தான் அணி கேப்டன் பிஸ்பா மரூஃப் தனது 6 மாத கைக் குழந்தையைபோட்டிக்கு நடுவே சென்று பார்த்து கொண்டே கிரிக்கெட் விளையாடியது ரசிகர்களிடையே பிரமிப்பில் ஆழ்த்தியது.பிஸ்பா மரூஃப் குழந்தையை இந்திய வீராங்கனைகளும் கொஞ்சி விளையாடினர்.