இங்கிலாந்தில் போலி குழந்தைகளை தயார் செய்து ரூ 19 கோடி பணத்தை சுருட்டியுள்ள சம்பவம் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இங்கிலாந்து நாட்டில் குழந்தைகளை பெற்றால் அவர்களை வளர்ப்பதற்காக அந்நாட்டு அரசு ஊக்கத்தொகையை வழங்கி வருகிறது.குழந்தையை வளர்க்க ஆகும் செலவுகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் நிதியுதவியை பெற்றோர் பெற முடியும்.
இதையடுத்து இந்த திட்டத்தின் மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த அலி பானா என்பவர் அரசை ஏமாற்றி ரூ 19 கோடி பணத்தை மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த பணத்தை பெறுவதற்கு அவர் கையாண்ட யுக்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர் அரசின் ஊக்கத்தொகையை பெறுவதற்காக சுமார் 188 குழந்தைகளை போலியாக தயார் செய்துள்ளார் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குழந்தைகளின் பெயரில் ஆவணகளை தயார் செய்து ஊக்கத்தொகையை பெற்றுள்ளார்.40 வயதான அலி பானா முகம்மது 188 முறை பணத்தை பெற்றுள்ளார்.
இது குறித்து அதிகாரி ஒருவர் ஆய்வு செய்த போது ஒரு குறிப்பிட்ட நம்பருக்கு அதிகமான முறை பணம் சென்றுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து விசாரணையில் இதுவரை 188 முறை பணம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.ர் இதுவரை 70 குழந்தைகளின் பெயர் மற்றும் ஆவணங்களை பயன்படுத்தி அரசிடமிருந்து ரூ19 கோடியை சுருட்டியுள்ளார். இந்த செய்தி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.