More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • போரை நிறுத்திவிட்டு பெரிய டுவிஸ்ட் வைத்த ரஷ்யா!
போரை நிறுத்திவிட்டு பெரிய டுவிஸ்ட் வைத்த ரஷ்யா!
Mar 08
போரை நிறுத்திவிட்டு பெரிய டுவிஸ்ட் வைத்த ரஷ்யா!

உக்ரைனில் தாக்குதலை நிறுத்திவிட்டு மனிதாபிமான வழித்தடங்களை திறக்க ஒப்புக்கொண்ட ரஷ்யா, மக்களை வெளியேற்றும் பாதைகளில் பெரிய ட்விஸ்ட் வைத்துள்ளது.



உக்ரைனில் 2 முறை தற்காலிக போர்நிறுத்தம் தோல்வியில் முடிந்த நிலையில், இன்று 3வது முறையாக மக்களை வெளியேற்ற போர்நிறுத்தத்திற்கு ரஷ்ய ஒப்புக்கொண்டது.



கீவ், கார்கிவ், Mariupol மற்றும் சுமி ஆகிய நகரங்கள் உட்பட பல உக்ரேனிய நகரங்களில் மனிதாபினமான வழித்தடங்களை திறந்து மற்றும் தாக்குதலை நிறுத்தி வைப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்தார்.



பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து ரஷ்யா இதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.



இந்நிலையில், மக்களை வெளியேற்ற ரஷ்யா ஒப்புக்கொண்ட பாதைகளை அந்நாட்டின் RIA செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.



அதில், சில பாதைகள் ரஷ்யா மற்றும் பெலாரஸை நோக்கி செல்வதை காட்டுகிறது.



கீவில் இருந்து திறக்கப்பட்டுள்ள வழித்தடம் ரஷ்யாவின் நட்பு நாடான பொலரஸை நோக்கி செல்கிறது, கார்கிவ் நகரிலிருந்து பொதுமக்கள் வெளியேற திறக்கப்பட்டுள்ள பாதை ரஷ்யாவை நோக்கி செல்கிறது.



Mariupol மற்றும் சுமி ஆகிய நகரங்களிலிருந்து வெளியேற திறக்கப்பட்டுள்ள வழித்தடங்கள் வேறொரு உக்ரேனின நகரங்களுக்கும் மற்றும் ரஷ்யாவுக்கும் செல்கிறது.



இந்நிலையில், இதற்கும் தனக்கும் சம்மந்திமில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் மறுத்துள்ளார்.  ரஷ்யாவுக்கு செல்லும் வழித்தடங்களை திறக்க மக்ரோன் கோரிக்கை விடுக்கவில்லை என ஜனாதிபதி அலுவகம் தெரிவித்துள்ளது.



இதுதொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் வெளியேறுவதற்கு மற்றும் உதவி பொருட்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்குமாறு புடினிடம் மக்ரோன் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar09

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் விள

Feb08

சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர

Feb27

 வியாழன் அன்று உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா, தொடர்

Feb27

உக்ரைனை ஆக்கிரமிக்க முற்படும் ரஷ்யப் படைகளின் முன்னே

Mar03

நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ

Mar04

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் திட்டமிட்டபடி நடந்துவரு

Mar08

Poissy (Yvelines) இல் நேற்றுஇம்மானுவல் மக்ரோனின்(Emmanuel Macron) தேர்தல் வ

Feb28

ரஷ்யா உக்ரைன் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நில

Feb15

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணி

Feb10

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது இளம் ம

Feb10

பதுளை மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக வர

Feb08

கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் கா

Mar05

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகம

Feb11

மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உய

Mar15

சுமார் 30,000 துருப்புகள் மற்றும் 50 போர்க்கப்பல்களுடன் ரஷ