உக்ரைனில் ரஷ்யத் துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து முன்னேற, ரஷ்யாவில் 56 நகரங்களில் போருக்கு எதிராகப் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பு எதிராக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ரஷ்ய மக்கள் சுமார் 5,000 பேர் இதுவரை கைதாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
தலைநகர் மாஸ்கோவில் 1,700 பேர், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 750 பேர் மற்றும் பிற நகரங்களில் 1,061 பேர் கைது செய்யப்பட்டதாக ரஷ்யாவின் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.