உக்ரைன் நகரங்களில் போரிடுவதற்காக ரஷ்யா, சிரியா நாட்டின் இராணுவத்தினரை தனது படையில் இணைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்காவில் வெளியாகும் வோல்ட் ஸ்சீரிட் ஜேர்னல் என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.
ரஷ்யா தனது படையில் இணைந்துக்கொண்டுள்ள சிரியா நாட்டு படையினரின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. ஏற்கனவே சிரியா படையினரின் ரஷ்யாவுக்கு சென்று உக்ரைன் போரில் ஈடுபட தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
சிரியா படையினருக்கு அதிகளவான தொகையை சம்பளமாக வழங்க ரஷ்யா இணங்கியுள்ளது. சிரியாவில் நடந்த சிவில் போரில், நகரங்களில் நடைபெற்ற போர் தொடர்பான அனுபவமுள்ள படையினரை உக்ரைன் போரில் ஈடுபடுத்துவதன் மூலம் தலைநகர் கார்கிவ் உட்பட பிரதான நகரங்களை கைப்பற்ற முயும் என ரஷ்யா நம்புவதாக தெரியவருகிறது.
இதனிடையே இஸ்ரேல் இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் உக்ரைன் சார்பில் போரில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.