தென்னிலங்கையில் தாய் ஒருவரை கொலை செய்ய முயன்ற மகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருவளை கலவில கந்த பகுதியை சேர்ந்த 17 வயதான யுவதி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தமையினால் தாயை கொலை செய்யும் நோக்கில் அவரின் தலையில் சுத்தியலால் தாக்கியுள்ளார்.
படுகாயமடைந்த தாய் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காதல் தொடர்பை நிறுத்துமாறு எச்சரித்ததால் குறித்த யுவதி தனது தாயை சுத்தியலால் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.