நடிகர் அஜித் தொடர்ந்து ஹெச் வினோத் உடன் தொடர்ந்து மூன்று படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். வலிமையை தொடர்ந்து அடுத்து AK61 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் அவர். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் ஹைதராபாத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது அஜித்திற்காக சுதா கொங்கரா எழுதி வைத்திருக்கும் கதை பற்றி பேசி இருக்கிறார்.
"கண்டிப்பாக இந்த படத்திற்கு அதிக வாய்ப்புகள் இருக்கு. அது நடக்கும்போது பயங்கரமாக இருக்கும். அது சூப்பரான ஸ்கிரிப்ட். சுதா இங்கிருக்கும் பெஸ்ட் இயக்குனர்களில் ஒருவர். அவர் அஜித்துக்காக சிறந்த ஸ்கிரிப்ட் வைத்திருக்கிறார். அது நடந்தால் சிறப்பாக இருக்கும்" என ஜிவி கூறி இருக்கிறார்.