விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்து அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார். அவர் அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கூட்டணி சேர்கிறார். அந்த படத்தில் குடும்ப சென்டிமென்ட் அதிகம் இருக்கும் என சொல்லப்படுகிறது.
விஜய் மற்றும் வெற்றிமாறன் இருவரும் கூட்டணி சேர்வதாக கூறப்பட்ட படம் இதற்கு பிறகாவது தொடங்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அது பற்றிய கேள்விக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பதில் அளித்து உள்ளார்.
டைமிங் தான் முக்கியம், அவர்களது கால் சீட் மற்றும் schedule ஒத்துப்போனால் கண்டிப்பாக இந்த ப்ராஜெக்ட் தொடங்கும். அவர்கள் தற்போது தங்கள் ப்ராஜெக்டுகளில் பிசியாக இருக்கின்றனர். அவர்கள் அதை முடித்தபிறகு தான் இந்த படம் பற்றி யோசிப்பார்கள் என ஜிவி தெரிவித்து உள்ளார்.