உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சமகாலத்தில் இலங்கையின் நிலைமையும் அதனை ஒத்ததாக இருப்பதாக சமூக வலைத்தளவாசிகள் தகவல் வெளியிட்டு வருகின்றன.
உக்ரைன் தலைநகரை விரைவாக கைப்பற்ற ரஷ்ய தலைவர் விளாடிமீர் புத்தின் தமது படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். எனினும் 10 நாட்களாக தொடரும் கள சமரில் அது சாதகமாக மாறவில்லை என்பது யுத்த களமுனை வெளிப்படுத்துகிறது. தலைநகரை கைப்பற்ற ரஷ்ய படைகள் நீண்ட வரிசையில் அணிவகுத்திருந்த போதும் அது இன்னும் சாத்தியமாகவில்லை.
உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ரஷ்யா தீவிரமாக போராடி வருகிறது. பல்வேறு கட்டங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்னும் இலக்கு எட்டப்படவில்லை. தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யாவின் கவச வாகனங்கள் சுமார் 64 கிலோமீற்றர் தூரத்தில் அணி வகுத்து நிற்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று இலங்கையில் மக்கள் தமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெறவும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.