மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.
நியூசிலாந்தில் மார்ச் 4ம் திகதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின.
இந்தத் தொடரில், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும், மற்றொரு அணியுடன் தலா ஒரு முறை மோதும். அதாவது, லீக் சுற்றில் ஒரு அணி 7 போட்டிகளில் விளையாடும்.
லீக் சுற்று முடிவில் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிக்கு அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். மற்ற நான்கு அணிகள் தொடரிலிருந்து வெளியேறும்.
இதன் காரணமாக, ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
இந்நிலையில் இன்று இந்திய மகளிர் அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதியது, பாகிஸ்தானுக்கு இது முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
Mount Maunganui மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது.
இந்திய தரப்பில் பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, பூஜா வஸ்த்ரகர், சினே ராணா அரை சதம் அடித்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் பந்து வீச்சில் நிதா தர், நஷ்ரா சாந்து தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
245 ரன்கள் எடுத்தல் வெற்றி என களமிறங்கி பாகிஸ்தான் மகளிர் அணி, 43 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியடைந்தது.
இந்திய தரப்பில் பந்து வீச்சில் ராஜேஸ்வரி கயக்வாட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் புள்ளிப்பட்டியில் 2 புள்ளிகள் மற்றும் +2.140 ரன் ரேட்டுடன் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்திய அணி தனது அடுத்து போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டி மார்ச் 10ம் திகதி Seddon பார்க் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.