உக்ரைனில் நடக்கும் போரில் இருந்து தப்பி வரும் அகதிகளை எந்த நாட்டவராக இருந்தாலும் ஜேர்மனி அழைத்துச் செல்லும் என்று ஜேர்மன் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் கூறியுள்ளார்.
ரஷ்ய படையெடுப்பு காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனில் இருந்து அண்டை ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர்.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து தப்பிச் செல்லும் எந்தவொரு அகதிகளையும் தங்க வைக்கும் ஜேர்மனியின் முடிவில் 'தேசியம்' ஒரு பங்கை வகிக்காது என்று உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் கூறியுள்ளார்.
"நாங்கள் உயிரைக் காப்பாற்ற விரும்புகிறோம். அது பாஸ்போர்ட்டைப் பொறுத்தது அல்ல" என்று ஃபேசர் கூறினார்.
உக்ரைனில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை தெரிவித்தது. அந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 1.5 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.