உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தற்போது உச்சம் பெற்றுள்ளது. இதில் இரு நாடுகளிலும் பெருமளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதில் ரஷ்யாவுக்கு எதிராகவும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் பல்வேறு நாடுகள் களமிறங்கின. குறிப்பாக உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்கள் வழங்குவது, நிதியுதவி என பல்வேறு உதவிகளை அமெரிக்கா செய்து வந்துள்ளது.
இந்த நிலையில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் 350 மில்லியன் டொலர் மதிப்பிலான உதவிகளை அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில், தாற்போது மீண்டும் ஆயுத தொகுப்பின் பெரும் பகுதியை வழங்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.