ரஷியாவின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் ஜபோரி ஜியா அணுஉலை நிலையத்தில் இன்று அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அங்குள்ள முக்கிய பகுதிகளில் தீப்பிடித்து எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த அணுமின் நிலையத்தில் இருந்து கதிர் வீச்சு கசிவு ஏற்படலாம் என்ற பெரும் பீதி நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
ஜபோரி ஜியா அணுமின் நிலையம் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் ஆகும் . ரஷிய படை, ஜபோரி ஜியா அணுமின் நிலையத்தை கைப்பற்றி இருக்கும் நிலையில் மேலும் ஒரு அணுமின் நிலையத்தை கைப்பற்ற ரஷ்யா தீவிரமாகி உள்ளது.
உக்ரைன் நாட்டில் உள்ள 2-வது பெரிய அணுமின் நிலையம் யுஷ்னோக்ரைன்ஸ்க் நகரில் உள்ளது. இந்த அணுமின் நிலையத்தை குறி வைத்து தாக்குதல் நடத்த ரஷியா தயாராகி வருகிறது.
இந்நிலையில் தற்போது யுஷ்னோக்ரைன்ஸ்கில் உள்ள அணுமின் நிலையத்துக்கு 32 கிலோ மீட்டர் தொலைவில் ரஷிய படைகள் உள்ளன. இதனால் விரைவில் 2-வது அணுமின் நிலையத்தையும் கைப்பற்ற தாக்குதல் நடத்தப்படலாம் என அஞ்சப்படுகின்றது.
அதேவேளை அணுமின் நிலையம் அருகே துப்பாக்கி சூடு நடத்துவதை ரஷ்ய துருப்புக்கள் நிறுத்த வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.