More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா தீட்டிய ரகசிய திட்டம் அம்பலம்!
உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா தீட்டிய ரகசிய திட்டம் அம்பலம்!
Mar 05
உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா தீட்டிய ரகசிய திட்டம் அம்பலம்!

 15 நாட்களுக்குள் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற ரஷியா திட்டமிட்டிருந்த தகவல் ரகசிய ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.



உக்ரைன் மீது ரஷியா இன்று 10வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், கெர்சன் நகரை கைப்பற்றி ரஷிய படைகளுக்கு தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.



இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷியாவின் படைகளுக்கும் இடம்பெறும் துப்பாக்கி சூட்டில் உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.



அதேவேளை, மீட்பு பணிக்காக உக்ரைனின் 2 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் மீது போர் தொடுப்பது தொடர்பாக ரஷியாவின் திட்டங்கள் எப்போது ஒப்புதல் வழங்கப்பட்டது என்ற தகவல் ரகசிய ஆவணங்கள் மூலம் கசிந்துள்ளது.



அதன்படி உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கான திட்டங்கள் ஜனவரி 18 அன்று அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் பிப்ரவரி 20 முதல் மார்ச் 6 ந்தேதி வரை 15 நாட்களுக்குள் உக்ரைனை பிடிக்கும் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ரஷ்யாவின் ரகசிய போர் ஆவணம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.



உக்ரைனை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் உக்ரைனில், ரஷியா இனப்படுகொலை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை முன்வைத்தும், ரஷியாவின் போர் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் எனக்கூறியும் உக்ரைன் சார்பில் சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.



இதற்கிடையில், உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா, ரஷியாவை கடுமையாக விமர்சித்து, ரஷியா தொடர்ந்து போர் குற்றங்களில் ஈடுபடுவதாக அவர் கூறியுள்ளார்.



அதாவது ரஷியா துருப்புக்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் நகரங்களில் வசிக்கும் பெண்களிடம் அத்துமீறி பலாத்காரம் செய்வதாக அவர் பகீர் தகவலையும் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,



நாட்டில் உள்ள நகரங்களில் குண்டுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டு வருகிறது. தங்களது கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களில் ரஷிய ராணுவ வீரர்கள் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக பல புகார்கள் உள்ளன. இது துரதிர்ஷ்டவசமானது. இவர்கள் அனைவரும் நீதித்துறையின் முன் நிறுத்தப்படுவார்கள். தாய்நாட்டை காக்க எங்களை விட பலமாக உள்ளவர்களிடம் மோதி வருகிறோம். சர்வதேச சட்டம் எங்கள் பக்கம் தான் உள்ளது. இது எங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep06

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிட

Apr14

ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ம

Jun04

அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு

Aug15

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந

Mar27

 உக்ரைன் மீது ரஷ்ய போர்க் கப்பல் சரமாரி ஏவுகணை தாக்க

Mar25

உக்ரைனுடனான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இர

Apr03

நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தா

Mar26

உக்ரைன் மீதான போரை ரஷியா கைவிட வேண்டும் என்று போப் ப

Oct04

இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லிண்டர் நேற்ற

Sep19

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்ற

Jul10