செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியாழன் அன்று ரஷ்ய விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் நாற்பத்தேழு பேர் கொல்லப்பட்டதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் கடுமையான ஏவுகணை தாக்குதல் காரணமாக மீட்புப் பணிகள் வியாழக்கிழமை இடைநிறுத்தப்பட்டன.
இதேவேளை பிராந்தியத்தில் போர் ஆரம்பித்ததில் இருந்து மொத்தம் 148 பேர், பெரும்பாலும் பொதுமக்கள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 300,000 மக்கள் வசிக்கும் நகரம் நாட்டின் வடக்கில், ரஷ்யா மற்றும் பெலாரஸ் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.