புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னிலேயே உள்ளது. அவர்களை உக்ரைய்னிலேயே அடக்கம் செய்யப்போவதாக உக்ரைய்ன் ஜனாதிபதியின் ஆலோசகர் எச்சரித்துள்ளார்.
அத்துடன் நாட்டின் ராணுவம் தற்செயலாக அல்லது அதிஸ்டத்தால் வெற்றி பெறவில்லை என்று கூறியுள்ளார்.
பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட ஒரு நீண்ட இடுகையில், அலெக்ஸி அரெஸ்டோவிச் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது உக்ரைய்ன் இராணுவம் பெற்ற வெற்றிக்கு காரணம், குறிப்பாக கட்டமைக்கப்பட்ட மற்றும் தெளிவாக செயல்படுத்தப்பட்ட ஒழுங்குமுறையே என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைய்ன் ஆயுதப் படைகள் மற்றும் பொது மக்களின் எதிர்ப்பு ரஸ்ய போர் இயந்திரத்தை நசுக்கும்" என்று அவர் சபதம் செய்தார்.
ரஸ்ய இராணுவம் பலமாக இல்லை. எனினும் பெரியது என்று அவர் குறிப்பிட்டார்