உக்ரைய்னில் போர் இடம்பெற்று கொண்டிருக்கையில் தப்பிச் சென்றவர்களையும் ரஸ்ய படையினர் தாக்கிய சம்பவம் ஒன்று டுவிட்டரில் வெளியாகியுள்ளது.
சண்டை தீவிரமடைந்து வந்தபோது ஒரு தந்தையும் மகனும் உக்ரைய்னில் இருந்து வெளியேற முயன்றனர்.
எனினும் புட்டினின் படையினர் எவ்வித எச்சரிக்கையும் இன்றி அவர்களது வாகனத்தை நோக்கி கடும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதன்போது தந்தை இறந்துவிட்டார் அவரின் உடல் இன்னும் மீட்கப்படவில்லை என்று மகன் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.