தனது செல்ல நாயுடன் உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள்ளார் இந்தியா மாணவரான ரிஷப் கௌசிக்.
உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ளதால் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் தாய்நாடு திரும்பி வருகின்றனர்.
அவர்களை மீட்க அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தனது செல்ல நாயுடன் மட்டுமே நாடு திரும்புவேன் என அறிவித்தார் ரிஷப் கௌசிக்.
இவர் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு ரேடியோ எலெக்ட்ரானிக்ஸ் படித்துவருகிறார்.
தனது நாயை அழைத்து வர தேவையான ஏற்பாடுகளை செய்து தர வேண்டி இவர் வெளியிட வீடியோ ட்ரெண்டானது .
இந்நிலையில் பல தடைகளை தாண்டி நாயுடன் இந்தியா வந்த காட்சிகள் வெளியாகி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.