நடிகை வரலட்சுமி நல்ல கதையுள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடிக்கிறார். இப்போது அவரது நடிப்பில் ஒரு 6 படங்களுக்கு மேல் வெளியாக உள்ளது.
அண்மையில் நடிகை வரலட்சுமி, சமந்தாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் நடிகை வரலட்சுமி தனது பிறந்தநாளை வீட்டில் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.