வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியாகி இருந்த திரைப்படம் மாநாடு. டைம் லூப் கதைக்களத்தில் முதன்முறையாக தமிழில் வெளியாகி இருக்கும் திரைப்படம்.
சிம்பு மிகவும் கிளாஸான லுக்கில் இதில் நடித்து ரசிகர்களை கவர்ந்துவிட்டார். படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது மாநாடு படம் வெளியாகி 100 நாட்களை எட்டியுள்ளது, ரோஹினி சினிமாஸ் மாநாடு 100வது நாள் ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்ய அதற்கு சிம்பு திடீர் விசிட் அடித்துள்ளார்.
திரையரங்கில் சிம்புவை பார்த்த ரசிகர்கள் படு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிம்புவும ரசிகர்களுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.