ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் வான் பாதுகாப்பு பிரிவு சுட்டு வீழ்த்தியுள்ளது.
இதை உக்ரைனின் ஆயுதப் படைகளின் ஜெனரல், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
Zatoka ரிசார்ட்டுக்கு அருகில் உள்ள ராணுவ உள்கட்டமைப்பு வசதிகளில் ஒன்றின் மீது
தாக்குதல் நடத்திய ரஷ்ய விமானத்தை வான் பாதுகாப்பு பிரிவு சுட்டு வீழ்த்தியது என ஜெனரல் ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்ட புகைப்படம் ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 9வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், Zatoka தாக்குதலை தீவரப்படுத்தி வருகின்றன.