More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • நேட்டோ விழித்தெழும் வரை வானத்தில் இருந்து குடிமக்களை புடின் கொல்வதைத் தடுக்க முடியாது!
நேட்டோ விழித்தெழும் வரை வானத்தில் இருந்து குடிமக்களை புடின் கொல்வதைத் தடுக்க முடியாது!
Mar 04
நேட்டோ விழித்தெழும் வரை வானத்தில் இருந்து குடிமக்களை புடின் கொல்வதைத் தடுக்க முடியாது!

‘நேட்டோ விழித்தெழுந்து, இது ஒரு பிராந்திய மோதல் அல்ல. இது ஜனநாயகத்திற்கு எதிரான போர், சுதந்திரத்திற்கு எதிரான போர் என்பதை புரிந்து கொள்ளும் வரை, வானத்தில் இருந்து நமது குடிமக்களை புடின் கொல்வதைத் தடுக்க முடியாது’ என மரியுபோல் மேயர் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.



உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்ய துருப்புக்கள் உக்கிர தாக்குதல்களை நடத்திவருவதால், உக்ரைனுக்குள் படைகளை அனுப்புமாறு நேட்டோ தலைவர்களை மரியுபோல் மேயர் செர்ஜி ஓர்லோவ் வலியுறுத்தியுள்ளார்.



ரஷ்யா, எமது நாட்டை பாலைவனமாக்கி பல பொதுமக்களைக் கொல்லும் வரை நிறுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலின் தொடக்கத்திலிருந்து ரஷ்யப் படைகள், 30க்கும் மேற்பட்ட குடிமக்களின் தளங்களை குண்டுவீசித் தாக்கியுள்ளன என்று அந்நாட்டின் உட்துறை அமைச்சகம் கூறியுள்ளது.



எனினும் ‘ரஷ்யர்கள் தாங்கள் பொதுமக்கள் மீதோ பொருட்களையோ தாக்கவில்லை என்று தெரிவித்து வருகின்றனர்.



ஆனால் உக்ரைனின் வடக்கு செர்னிஹிவ் பிராந்தியத்தில் ரஷ்ய விமானப் படையினர் நடத்தியத் தாக்குதல்களில் 47பேர் உயிரிழந்துள்ளாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இது முந்தைய எண்ணிக்கையான 33இல் இருந்து உயிரிழப்பு எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. உக்ரைனின் உள்ளூர் அவசர சேவைகளின் படி, கடுமையான ஷெல் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள்  இடைநிறுத்தப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct01

அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்தவர் கேப்ரியல் சலாஜர் (வ

Jan19

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடி

Nov05

ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு

Jun17

சண்டை நிறுத்தத்துக்கு பிறகு முதல் முறையாக காசா நகர் ம

Jan26

இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு  நிரந்தமா

Jan19

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுச

Feb15

பாகிஸ்தானின் பிரபல கவர்ச்சி நடிகை குவான்டீல் பலூச், ஆ

Sep23

கொவிட் தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலா

Nov03

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக ஐ.எஸ்.

Jun22

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்

Feb14

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில

Mar28

பலத்த இழப்புகளைச் சந்தித்த ரஸ்ய தரப்பு, உக்ரைனின் கெய

Feb02

பொது பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படக்கூடிய நோவாவாக்

Mar09

ரஷ்ய படைகளின் தாக்குதலால் உக்ரைனில் இதுவரை 61 மருத்துவ

Jun07

அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலக மக்கள் அனைவருக்கும் கொரோ