உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி மாகாணங்களில் தங்கியுள்ள இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரை மீட்க 130 பேருந்துகள் தயாராக உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே 9-வது நாளாக இன்றும் போர் நீடித்து வருகிறது. உக்ரைனின் சப்ரோசியாவில் உள்ள அணுமின் நிலையத்தில் ரஷ்ய படைகள் கைப்பற்றியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் ,போர் நடைபெறும் பகுதியில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் மீட்க, மத்திய அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அதன் அண்டை நாடுகளுக்கு சாலை மார்க்கமாக அழைக்கப்பட்டு,பிறகு அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில்,உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி மாகாணங்களில் தங்கியுள்ள இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரை மீட்க 130 பேருந்துகள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ரஷியாவின் பெல்கோரோட் பகுதிக்கு அழைத்து வரப்படும் மாணவர்கள் விமானங்கள் மூலம் தாயகம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும்,ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.