இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்தியாவின் பிரபலமான நடன ஆசிரியை கலா மாஸ்டர் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கை வந்துள்ள கலா மஸ்டர் 6 நாட்கள் தங்கியிருந்து பல இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக கூறப்படும் நிலையில், அவருடன் அவரது கணவர் உட்பட குடும்பத்தினரும் வவருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்றையதினம் அவர் வவுனியா பொலநறுவை போன்ற இடங்களுக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து விரைவில் அவர் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கும் கலா மாஸ்ரர் விஜயம் செய்யவிருக்கிறார்.
இதேவேளை அண்மை காலமாக இந்திய திரை பிரபலங்கள் பலர் இலங்கைக்கு விஜயம் செய்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.