More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • கொடூர நாட்கள் காத்திருக்கிறது... மொத்தமாக முடிப்போம்: விளாடிமிர் புடின் ஆவேசம்
கொடூர நாட்கள் காத்திருக்கிறது... மொத்தமாக முடிப்போம்: விளாடிமிர் புடின் ஆவேசம்
Mar 04
கொடூர நாட்கள் காத்திருக்கிறது... மொத்தமாக முடிப்போம்: விளாடிமிர் புடின் ஆவேசம்

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் திட்டமிட்டபடி நடந்துவருவதாகவும், இன்னும் கொடூரமான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



உக்ரைன் மீதான ரஷ்ய போர் 7வது நாளை எட்டியுள்ளது. இருதரப்பிலும் உயிர்ச்சேதம் அதிகரித்து வருகிறது. உக்ரேனிய அப்பாவி பொதுமக்கள் ஆயிரங்கள் ரஷ்யாவின் கண்மூடித்தனமான உக்கிர தாக்குதல்களுக்கு பலியாகியுள்ளனர்.



உக்ரைனில் ஒவ்வொரு மாவட்டமாக சிதைத்து ரஷ்ய ராணுவம் முன்னேறி வருகிறது. இது ஒரு போர் அல்ல எனவும், ரஷ்ய துருப்புகள் திட்டமிட்டே உக்ரைன் நகரங்களை சிதைத்து முன்னேறுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், வியாழக்கிழமை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், மிகக் கொடூரமான தாக்குதல் இனிமேல் தான் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



இரு தலைவர்களும் சுமார் ஒன்றரை மணி நேரம் உக்ரைன் விவகாரம் தொடர்பில் காரசாரமாக விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனை மொத்தமாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே இந்த அதிரடி தாக்குதலின் நோக்கமாக இருக்கும் எனவும்,



இனிவரும் நாட்கள் கொடூரமாக இருக்கும் எனவும், தாக்குதலைத் தொடர்வதற்கான தனது மிகப்பெரிய உறுதியை ஜனாதிபதி புடின் வெளிப்படுத்தியுள்ளார் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ரஷ்ய துருப்புகள் தங்களின் திட்டப்படியே தாக்குதலை முன்னெடுத்து வருவதாகவும், உக்ரைன் ராணுவம் சரணடைய மறுக்கும் ஒவ்வொரு நாளும் கொடூரமான தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் எனவும் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



ஆனால், உக்ரைன் மீதான தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர தம்மால் இயன்ற அனைத்து நகர்வுகளையும் முன்னெடுக்க இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் தெரிவித்துள்ளார்.



இதனிடையே, உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் பேசுகையில், புடின் மீதான விரோதப் போக்கை பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் குற்றம் சாட்டியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தனது சர்வதேச கடமைகளை மறந்து, தனியொருவராக விளாடிமிர் புடின் இந்த போருக்கு துணிந்துள்ளார் என பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.



மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் எதிரான போர் அல்ல இதுவென்றும், நேட்டோ தளங்கள் எதுவும் உக்ரைனில் இதுவரை அமைக்கப்படவில்லை எனவும் மேக்ரான் விளக்கமளித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb20

கடந்த 18 மாதங்களில் 168 மாணவர்கள் மற்றும் இளைஞர்-யுவதிகள்

Feb06

புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுச

Jan11

டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி

Feb08

சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர

Feb26

இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியு

Mar05

உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தற்போது உச்சம் பெற்றுள்ளது

Feb28

உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இ

Mar04

உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யா

Feb28

.

500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீ

Mar05

யாழில் போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒ

Feb23

தங்கம் விலையானது இன்றைய வாரத்தில் ஏற்றம் இறக்கம் கண்ட

Mar05

ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் வான் பாதுகாப்பு பிரிவு சு

Feb07

பல நூற்றாண்டுகளாக இருந்ததாக கருதப்படும் மர்மத் தீவு த

Feb09

கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி

Feb25

தற்போது அமெரிக்க அதிபராக தான் இருந்திருந்தால் உக்ரைன