இலங்கையில் செயற்படும் இந்திய எரிபொருள் நிறுவனமான “இந்தியன் ஒயில் கோப்ரேசன்” இலங்கைக்கு எரிபொருட்களை விநியோகிக்கவுள்ளது.
இதன்படி எதிர்வரும் 4 முதல் 5 மாதங்களுக்கு இந்திய நிறுவனம் இலங்கைக்கு எரிபொருட்களை விநியோகிக்கும் என்று அறிவிக்கப்பட்;டுள்ளது
இதில்,பெற்றோல், டீசல் மற்றும் ஜெட் எரிபொருட்கள் உள்ளடங்கவுள்ளன. இது தொடர்பில் இந்திய நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக ரொயட்டர்ஸ் தெரிவித்துள்ளது.