கடந்த செவ்வாய் கிழமை வரை அமெரிக்காவில் தங்கியிருக்கும் உக்ரேனிய பொதுமக்கள் சிறப்பு புலம்பெயர்ந்தோர் அல்லாத பிரிவின் கீழ் நாட்டில் தங்க அனுமதிக்கப்படுவார்கள்.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலர் எலெஜான்ட்ரோ மயோர்காஸ் இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி, உக்ரைனியர்களுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் 'தற்காலிகப் பாதுகாக்கப்பட்ட நிலை” நீடிக்கும் என்று கூறியுள்ளார்.
12 நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏற்கனவே 'தற்காலிகப் பாதுகாக்கப்பட்ட நிலை”இன் கீழ் அமெரிக்காவில் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
அவற்றில் பர்மா, ஹெய்ட்டி, சிரியா மற்றும் ஏமன் ஆகியவை நாடுகளின் பொதுமக்களும் அடங்குகின்றனர்.
https://twitter.com/i/status/1499513490389745666