விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களும் தமது பதவிகளில் இருந்து விலக வேண்டும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் கலந்துரையாடல் ஏற்பட்டுள்ளது.
எனினும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தான் வகித்து வரும் தொழில் அமைச்சர் பதவியில் இருந்து விலக மறுத்துள்ளதாக தெரியவருகிறது.
அமைச்சு பதவிகளில் இருந்து விலகுவதா இல்லையா என்பது குறித்து இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உத்தியோகபூர்வமான கலந்துரையாடல்கள் இதுவரை நடைபெறவில்லை.
எனினும் கட்சியின் மத்திய செயற்குழு கூறும் எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தில் இருந்து விலக தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அண்மையில் நடைபெற்ற கட்சியின் மாநாடு ஒன்றில் தெரிவித்திருந்தார்.