More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • ரஷ்ய பீரங்கிகளை துணிந்து தடுத்து நிறுத்தும் உக்ரைனிய மக்கள்! வைரலாகும் காட்சி
ரஷ்ய பீரங்கிகளை துணிந்து தடுத்து நிறுத்தும் உக்ரைனிய மக்கள்! வைரலாகும் காட்சி
Mar 04
ரஷ்ய பீரங்கிகளை துணிந்து தடுத்து நிறுத்தும் உக்ரைனிய மக்கள்! வைரலாகும் காட்சி

உக்ரைனில், ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ரைன் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது.



நேட்டோ அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைனில் 9-வது நாளாக ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது.



இதனால், உலக நாடுகள் ரஷ்யா மீது பல தடைகளை விதித்து, கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இருப்பினும் ரஷ்யா, உக்ரைன் மீதான போரை தொடர்ந்து நடத்தி வருகிறது.



இந்தப் போரில் உக்ரைனைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மக்கள், கொல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் உள்பட வெளிநாட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர்.



மேலும், இந்தப் போரில் ரஷ்ய இராணுவத்திற்கு சொந்தமான 30 விமானங்கள், 31 ஹெலிகாப்டர்கள், 217 டாங்கிகள், 90 சிறிய ரக பீரங்கிகள், 900 ரஷ்யப் படைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களை அழித்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்ப்  படைகளைச் சேர்ந்த 9,000 வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் கூறியுள்ளது.



இருப்பக்கமும் உயிர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், போரை நிறுத்தி அமைதி ஏற்படுத்துவதற்காக, ரஷ்யா - உக்ரைன் இடையே இன்று பெலாரசில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது.



இந்த நிலையில், உக்ரைனின் பொதுமக்கள், செர்னிஹிவ் பகுதியில் பாக்மாச் நகரத்தின் வழியாக உள்ளே நுழையும், ரஷ்ய ராணுவ டாங்கிகள் மீது ஏறி தடுக்கும் காட்சிகள் வெளியாகி, வைரலாகி வருகிறது.



உக்ரைனியே மக்களின் இந்த துணிச்சல் ஈடு இணையற்றது என ஹங்கேரி, போலந்து, ஸ்லோவேகியா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய விசே கிராடு 24 குழு பாராட்டியுள்ளது.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb27

உக்ரைனை ஆக்கிரமிக்க முற்படும் ரஷ்யப் படைகளின் முன்னே

Feb10

கனவு காண்பது என்பது மனிதனுக்கு ஒரு சாதாரண விஷயம் தான்.

Mar03

  உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில், ரஷ்யாவிற்க

Feb26

 உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழ

Mar09

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் விள

Feb25

தற்போது அமெரிக்க அதிபராக தான் இருந்திருந்தால் உக்ரைன

Mar08

இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலனை அடைவதற்கு ரஷ

Feb09

கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி

May04

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும

Feb27

உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக

Feb07

சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கொரோனா காப

Mar05

உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தற்போது உச்சம் பெற்றுள்ளது

Mar14

ஈராக்கில் உள்ள தூதரகம் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டது குறி

Feb26

  உக்ரை மீது மூன்றாவது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடத

Mar05

செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியா