ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உக்ரைன் போருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 8 ஆவது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை எதிர்த்து ரஷ்யாவில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.