கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் ஜோடியாக நடித்த சித்து மற்றும் ஸ்ரேயா அஞ்சன் ஆகியோர் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். கடந்த வருடம் நவம்பர் மாதம் 22ம் தேதி அவர்கள் திருமணம் நடைபெற்றது.
தற்போது மூன்று மாதங்களே ஆகும் நிலையில் அவர்கள் வீட்டில் புது விசேஷம் வந்திருக்கிறது. ஸ்ரேயா கர்ப்பமா என நீங்க நினைத்திருந்தால் விஷயம் அதுவல்ல. ஸ்ரேயாவின் தங்கை பிரியா அஞ்சன் திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது.
திருமண கோலத்தில் தங்கை இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஸ்ரேயா அஞ்சன் மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார். நிச்சயதார்த்தம் ஐந்து வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில் தற்போது திருமணம் நடக்கிறது.