More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • உக்ரைனில் இரண்டாவது இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்! பின்னணி என்ன?
உக்ரைனில் இரண்டாவது இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்! பின்னணி என்ன?
Mar 03
உக்ரைனில் இரண்டாவது இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்! பின்னணி என்ன?

உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் நாடு மீது போர் தொடுப்பதாக அறிவித்ததையடுத்து இன்றுவரை அந்நாட்டில் போர் வெடித்து வருகின்றது.



ரஷ்யா கடல்,வான்வழி மூலம் உக்ரைனை கொடூரமாக தாக்கி வருகின்றது. இந்நிலையில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் கர்நாடகாவை சேர்ந்த 21 வயது மாணவர் உயிரிழந்த நிலையில் தற்போது இரண்டாவதாக பஞ்சாபை சேர்ந்த மாணவர் ஒருவரும் நேற்று மரணம் அடைந்து இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.



பஞ்சாப்பின் பர்னாலா பகுதியை சேர்ந்தவர் Chandan Jindal (22). இவர் உக்ரைனில் உள்ள Vinnytsia National Pyrogov Memorial Medical பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளார்.



இந்நிலையில் அந்த மாணவருக்கு எதிர்பாராதவிதமாக நேற்று மூளையில் stroke ஏற்பட்டுள்ளதையடுத்து உடனடியாக அவர் Vinnytsia நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் எதிர்பாராதவிதமாக இந்திய மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணம் அடைந்துள்ளார்.



இந்நிலையில் Chandan Jindal-யின் பெற்றோர் தனது மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar05

தமிழகத்தில் திருநங்கையாக மாறிய மகனுக்கு அனைவர் முன்ன

Jun07

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக அமைக்கப்பட

Apr26

ஒரு துணைவேந்தரை நியமிக்க வேண்டுமானால் உயர்கல்வித்து

Mar11

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ர

Feb01

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியானது, சுயசார்ப

Jul04