உக்ரைனின் தெற்குப் பகுதியான கெர்சன் நகரைக் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நகரம், இதுவரை ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட உக்ரைனில் மிகப்பெரிய நகரமாகும்.
இதேவேளை உக்ரைய்னில் இரண்டாவது அதிக மக்கள் தொகையை கொண்ட கார்கிவ் நகரின் காவல்துறை நிலையம் மீது ரஸ்ய படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து கட்டிடம் தீப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நகரின் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 112 பேர் காயமடைந்துள்ளனர் என்று நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.