More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • உக்ரைனில் எனக்கு பயமாக இருக்கிறது! கொல்லப்படுவதற்கு முன் ரஷ்ய வீரர் அம்மாவிற்கு அனுப்பிய உருக்கமான குறுஞ்செய்தி
 உக்ரைனில் எனக்கு பயமாக இருக்கிறது! கொல்லப்படுவதற்கு முன் ரஷ்ய வீரர் அம்மாவிற்கு அனுப்பிய உருக்கமான குறுஞ்செய்தி
Mar 02
உக்ரைனில் எனக்கு பயமாக இருக்கிறது! கொல்லப்படுவதற்கு முன் ரஷ்ய வீரர் அம்மாவிற்கு அனுப்பிய உருக்கமான குறுஞ்செய்தி

உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒருவர் தனது தாய்க்கு உருக்கமான குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.



உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷ்யா பயங்கர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.



இதற்கிடையே, தங்கள் நாட்டையும், மக்களையும் பாதுகாக்க உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.



இதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.



இந்நிலையில், உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒருவர் தனது தாய்க்கு உருக்கமான குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.



இதுகுறித்து ஐ.நாவுக்கான உக்ரைன் தூதர் செர்ஜி கிஸ்லிட்சியா கூறியதாவது:-



உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர் தனது தாய்க்கு அனுப்பிய இறுதி குறுஞ்செய்தியில், தான் பயப்படுவதாகவும், தனது ராணுவம் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



மேலும் அந்த குறுஞ்செய்தியில், அம்மா, நான் உக்ரைனில் இருக்கிறேன். இங்கே ஒரு உண்மையான போர் நடந்து கொண்டிருக்கிறது. நான் பயப்படுகிறேன். நாங்கள் அனைத்து நகரங்களிலும் குண்டு வீசி தாக்குதல் நடத்துகிறோம்.



பொதுமக்களைக் கூட குறிவைக்கிறோம். மக்கள் எங்களை கடந்து செல்ல விடாமல் வாகனங்களின் கீழ் விழுகின்றனர். சக்கரங்களுக்கு அடியில் சிக்கி தூக்கி எறியப்படுகின்றனர். அவர்கள் எங்களை பாசிஸ்டுகள் என்று அழைக்கிறார்கள்.



அம்மா இது மிகவும் கடினமானது என்று கூறியிருந்தார். இது அவர் கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி. இந்த சோகத்தின் அளவை உணர்ந்து கொள்ளுங்கள்.  என குறிப்பிட்டுள்ளார். 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar08

 உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்

Feb08

கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் கா

Mar02

மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என

Mar04

உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர்

Mar08

ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ

Feb24

மரணம் நெருங்கும் போது, ​​அந்த நேரத்தில் ஒருவர் மனதில்

Mar09

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்

May04

 உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தி

Mar09

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் விள

Mar06

உக்ரைய்ன் மரியுபோலில் நகரில் போர் நிறுத்தத்தை அறிவித

Mar11

பாம்புடன் சிறுமி ஒருவர் செல்லமாக கொஞ்சி விளையாடும் வீ

Feb27

ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து உக்ரைன் சிறையில

Feb25

ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நட

Feb07

பல நூற்றாண்டுகளாக இருந்ததாக கருதப்படும் மர்மத் தீவு த

Feb07

சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கொரோனா காப