More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • சர்க்கரை பொட்டலத்தை வைத்து என்ன செய்கிறார்? 5 மில்லியன் பேர் அவதானித்தும் புரியாத புதிர்
சர்க்கரை பொட்டலத்தை வைத்து என்ன செய்கிறார்? 5 மில்லியன் பேர் அவதானித்தும் புரியாத புதிர்
Mar 01
சர்க்கரை பொட்டலத்தை வைத்து என்ன செய்கிறார்? 5 மில்லியன் பேர் அவதானித்தும் புரியாத புதிர்

பொதுவாகவே மாயாஜாலம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும், இது விரைவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து விடுகிறது. இதுபோன்ற ஒரு நிகழ்வு தான் தற்போது இணையவாசிகளை வெகுவாக ஈர்த்துள்ளது.



சாதாரண சர்க்கரை பொட்டலம் ஒன்றை வைத்து ஒரு மனிதர் செய்யும் மாயாஜாலம் அப்பகுதி மக்களையும், இந்த வீடியோவை இணையத்தில் கொண்டவர்களையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோ ஓவர்டைம் என்கிற ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு, இந்த வீடியோ இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.



ஆனால் முதன்முதலில் இந்த இந்த வீடியோ ஜேடன் ரே என்பவரால் டிக்டாக்கில் பதிவிடப்பட்டது, இதன்பின்னர் தான் இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டு இருக்கிறது. அந்த வைரல் வீடியோவில், ஒரு மனிதர் சர்க்கரைப் பொட்டலத்தை பிய்த்து அதிலுள்ள சர்க்கரை முழுவதையும் அவரது இடது கையில் கொட்டுகிறார்.



பின்னர் அவர் கையில் வைத்திருக்கும் சர்க்கரையை தூக்கி காற்றில் எறிந்துவிட்டு, அந்த பேப்பரை வாயில்,வைத்துக்கொள்கிறார். பின்னர் தனது வாயிலிருந்து அந்த பேப்பரை எடுத்தவர், வானத்திலிருந்து எதையோ பிடிப்பது போல் வானத்தை நோக்கி வலது கையைக் காட்டுகிறார்.



திடீரென்று அவர் காற்றில் வீசிய சர்க்கரை மீண்டும் அவர் கைகளில் வருகிறது, அவர் அந்த சர்க்கரையை மீண்டும் அந்த பொட்டலத்திற்குள் கொட்டுவதோடு அந்த வீடியோ நிறைவடைகிறது.



'நான் இதை 57 முறை பார்த்தேன், ஆனால் இன்னமும் இவ்வாறு நடந்தது என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை' என்ற கேப்ஷனுடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ நெட்டிசன்களை மெய்சிலிர்க்க செய்துள்ளது,



ஆனால் சிலர் அவர் போலியான கட்டை விரலை பயன்படுத்தி இந்த கண்கட்டி வித்தையை செய்கிறார் என்று கூறுகின்றனர். மற்றொருவர் 'நான் இந்த வீடியோவை பலதடவை பார்த்தேன், பாஸ் செய்தும் பார்த்தேன், ஆனால் அவர் இதை எப்படி செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை' என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். இதுபோன்று பலரும் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan29

சர்வதேச சந்தை முதல், இந்திய சந்தை வரையில் தங்கத்தின் வ

Jan27

 இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு லண்ட

Mar05

இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச் பி நிறுவனம், ஆப்பிள் மற்றும

Jan19

கொரோனாவுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள முக்கியமான தடு

Mar11

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத

Feb05

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்‍தை முன்னிட்டு அமெரி

Mar09

தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்ப

Feb05

இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்ய

May18

அண்டார்டிகாவில் அடுத்த 4 மாதங்களுக்கு சூரிய ஒளி தெரிய

May27

அமெரிக்காவில் நாயின் கழுத்தில் பாய்ந்த அம்பை கால்நடை

Jan19

இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதிய

May25

நேபாளத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் உலகின் மிக க

Jan19

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக

Feb19

அமெரிக்க நிறுவனமான டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன்(Textron Aviation) தனது

Jan29

நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேல் தனி ஆளாக ஒரு இளைஞர் அ