More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • வெளியே கிளம்பிய மனைவிக்கு ஏற்பட்ட அசம்பாவிதம்! Safety Pin-க்கு பின்னணியில் இப்படியொரு கதையா?
வெளியே கிளம்பிய மனைவிக்கு ஏற்பட்ட அசம்பாவிதம்! Safety Pin-க்கு பின்னணியில் இப்படியொரு கதையா?
Mar 01
வெளியே கிளம்பிய மனைவிக்கு ஏற்பட்ட அசம்பாவிதம்! Safety Pin-க்கு பின்னணியில் இப்படியொரு கதையா?

சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி பின் என்ற பொருள் மிகவும் பயனுள்ளது. புடவையை அணிந்து கொள்ளும் போது மடிப்புகளை பின் செய்வது முதல், அவசரகாலத்தில் நம் மானத்தைக் காப்பாற்றுவது வரை, பல விதமான விஷயங்களுக்கு நாம் சேப்டி பின்னை பயன்படுத்துகிறோம் . அத்தகைய சேப்டி பின்னின் வரலாறு பற்றி உங்களுக்கு தெரியுமா? அதன் பெயருக்குப் பின்னால் உள்ள கதை என்ன, அது ஏன், எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை இன்று அறிந்து கொள்ளலாம்.



ஹூக்கு எனப்படும் சேப்டி பின் (Safety Pin) 1849 ஆம் ஆண்டில் வால்டர் ஹன்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. வால்டர் ஹன்ட் இதுபோன்ற சிறிய சிறிய பயனுள்ள விஷயங்களைக் கண்டுபிடித்ததற்காக அறியப்பட்டவர் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்.



அவருக்கு அதிக அலவில் கடன் இருந்தது. கடன் தொல்லையினால் அவதிப்பட்டு வந்த அவர், கடனை அடைக்க அவர் தொடர்ந்து புதிய விஷயங்களைக் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்புகளில் சேப்டி பின்னும் ஒன்று.



சேப்டி பின் கண்டிபிடிக்கப்பட்ட பிறகு, இந்த பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை வால்டர் உணர்ந்தார். அதன் பிறகு காப்புரிமை பெற்று விற்றார். அந்த நேரத்தில், இந்த கண்டு பிடிப்பிற்காக அவருக்கு $ 400 கிடைத்தது.



இதுமட்டுமின்றி பேனா, கத்தியை கூர்மைப்படுத்தும் கருவிகள், ஸ்பின்னர்கள் போன்றவற்றையும் வால்டர் ஹன்ட் கண்டு பிடித்தார். அவர் ஒரு தையல் இயந்திரம் கூட கண்டுபிடித்தார்.



ஒருமுறை வால்டரின் மனைவி ஏதோ வேலையாக வெளியே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது உடையில் இருந்த பட்டன் உடைந்தது. அந்நிலையில், வால்டர் ஒரு பொத்தானாகச் செயல்படும் வகையில் சிறு கம்பியைக் கொண்டு தயாரித்து அவருக்கு உதவினார். இது தான் சேப்டி பின் கண்டி பிடிக்கப்பட்டது தொடர்பான கதை. அப்போது அதற்கு டிரெஸ் பின் என்று பெயர் சூட்டப்பட்டது.    



மாறிவரும் காலத்திலும் அதன் பயன் குறையவில்லை. இதை தயாரிக்கும் நிறுவனங்கள், அதன் டிசைனில் குளறுபடி இல்லாமல், பெண்களின் புடவையின் நிறத்திற்கேற்ப பின்னை கலர்ஃபுல்லாக செய்தன.



ஹன்ட்டின் இந்த கண்டுபிடிப்பபான சேப்டி பின் மூலம் மக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, கம்பியால் விரல்களில் ஏற்பட்ட காயமும் தவிக்கப்படுவதால், இதற்கு சேஃப்டி பின் என்று பெயர் வந்தது. பெண்கள் புடவை முதல் சல்வார் கமீஸ் வரை அனைத்திற்கும் சேப்டி பின்னை பயன்படுத்துகின்றனர். காயம் ஏற்படாமல் பாதுகாப்பதற்காகவே இது சேப்டி பின் என்று அழைக்கப்படுகிறது.    






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar06

இலங்கையர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசா ம

Feb04

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பெண்கள் கருத்தரி

Mar29

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்

Mar08

இந்தியாவில் பெண்கள் உரிமைகளை பாதுகாக்க பல சட்டங்கள் அ

Feb25

உக்ரைனின் தற்போதைய நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்

Feb10

விண்வெளியில் ‘இறந்த’ நட்சத்திரத்தின் கடைசித் தருண

Mar04

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப

Jan19

கொரோனாவுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள முக்கியமான தடு

Feb03

பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும

Feb03

இந்தியாவின் இஸ்ரேல் துாதுவர் நயோர் கிலான் (Naor-Gilon) இலங்கை

Feb05

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்‍தை முன்னிட்டு அமெரி

Feb11

காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு அரசாங்கம் நடவடிக்

Mar11

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காரணமாக இர

Mar04

 உக்ரைனில் ரஷ்ய படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கா

Feb11

பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இர