More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை!...
அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை!...
Feb 28
அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை!...

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’. சமூக கருத்தை வலியுறுத்தி உருவான திகில் திரைப்படமான இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானர் அகிலா நாராயணன். அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணான இவர் கலை மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தனது தனிப்பட்ட முயற்சியால் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். நடிப்போடு பிரபல பாடகியாகவும் வலம் வந்த அகிலா நாராயணன், கலைத்துறையோடு தனது சாதனை பயணத்தை  நிறுத்திக்கொள்ளாமல், ராணுவத்தில் இணைய வேண்டும் என்று முடிவு செய்தார்.



மிக கடினமான பயிற்சிகளை கொண்ட அமெரிக்க ராணுவத்தில் பட்டம் பெறுவது என்பது மிக சவாலானது என்றாலும், தனது மகளின் விருப்பத்துக்கு அகிலாவின் குடும்பத்தாரும் சம்மதம் தெரிவிக்க, கடுமையான பல மாத பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்ற அகிலா நாராயணன், அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார்.



இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்றிருக்கும் அகிலா நாராயணன், அமெரிக்க ராணுவத்தின் பலவிதமான கடின பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து வீரமும், விவேகமும், பலமும் கொண்ட பெண்மணியாக தன்னை நிரூபித்துள்ளார்.



அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான சட்ட ஆலோசகராக செயலாற்ற இருக்கும் அகிலா நாராயணன், தான் வாழும் நாட்டுக்காக சேவை செய்வதற்காகவே இத்துறையில் இணைந்துள்ளார். அவரது இத்தகைய  சேவை மனப்பான்மைக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருவதோடு, அவரது குடும்பத்தாரையும் வாழ்த்தி வருகிறார்கள்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

கியூட் ஜோடியின் ரம்ஜான் கொண்டாட்டம் 

தமிழ் திரை

Jul19

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடன இயக்கு

May03

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன

Sep26

வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன்

Apr28

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு

Jan27

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜ

May02

18 வயது நடிகை கீர்த்தி ஷெட்டியின் கலக்கல் போட்டோஷூட் பு

Sep16

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் 2 பாகங

Sep25

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சை

Jul20

நடிகை ஜான்வி கபூர் நாக்கு மூக்க பாடலுக்கு நடனமாடி உள

Jul04

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ம

Mar01

வலிமை படம் தற்போது தமிழ்நாட்டில் நல்ல வசூல் ஈட்டி வரு

Nov06

தீபாவளி தினத்தை முன்னிட்டு ரஜினியின் அண்ணாத்த படமும்,

Sep04

இந்தி சின்னத்திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்

Aug17

மம்மூட்டி நடிக்கும் ‘புழு’ படத்தின் படப்பிடிப்பு