உக்ரைனின் முக்கிய நகரம் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய வீரர்கள் அந்நாட்டுடன் ஐந்தாவது நாளாக சண்டையிட்டு வருகின்றனர்.
இதில் இரு பக்கத்திலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. தொடர் போர் தாக்குதலை தொடர்ந்து உக்ரைனின் முக்கிய பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. நாட்டை காப்பாற்ற மக்கள் அனைவரும் ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற அழைப்பை ஏற்று உக்ரைன் மக்கள் பலரும் ராணுவ வீரர்களிடம் பயிற்சி பெற்றனர்.
உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றியிருந்தது.
இந்த நிலையில் உக்ரைன் படைகள் கடுமையாக போரிட்டு ரஷ்ய படைகளை விரட்டியடித்து கரர்கிவ் நகரை மீட்டியுள்ளதாக கார்கிவ் கவர்னர் அறிவித்துள்ளார்.