More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • ரஷ்யாவிடம் சரணடையாத வீரர்களின் குடும்பங்களை தாக்க திட்டம்:
ரஷ்யாவிடம் சரணடையாத வீரர்களின் குடும்பங்களை தாக்க திட்டம்:
Feb 28
ரஷ்யாவிடம் சரணடையாத வீரர்களின் குடும்பங்களை தாக்க திட்டம்:

ரஷ்ய ராணுவத்திடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் குடும்பங்களை தாக்கி அழிக்க ரஷ்யா திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.



உக்ரைனை ரஷ்யா அனைத்து பக்கங்களில் இருந்தும் தீவிரமாக தாக்கி வரும் நிலையில், அந்த நாட்டு ராணுவ வீரர்களை உடனடியாக ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையும் படி ரஷ்ய எச்சரிக்கை விடுத்துவருகிறது.



இந்த நிலையில் ரஷ்யாவிடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் குடும்பங்களை தாக்கி அழிக்க ரஷ்யா திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்காவின் உளவுத்துறை தகவல் அளித்து இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.



உக்ரைன் வீரர்களின் அத்தகைய சரணைடைதல் இன்றுவரை நடைபெறாவிட்டாலும், ரஷ்ய ஜனாதிபதியின் இந்த திட்டத்தால் உக்ரைன் வீரர்களை மறைமுகமான வழியில் விரைவில் சரணடைய வைக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், விரைவில் ரஷ்ய ராணுவம் உக்ரைன் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மீது மனித உரிமை விதிமீறல்களில் இறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.



இதையடுத்து உக்ரைனில் மனித உரிமை மீறல்களில் விரைவில் ரஷ்யா மேற்கொள்ளலாம் என தானும் நம்புவதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கருத்து தெரிவித்துள்ளார்.



மேலும் உக்ரைனியர்களை ஆக்கிரமிப்பாளர்களாக சித்தரிக்க ரஷ்யா போலியான பிரச்சாரத்தில்  இறங்கிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb26

  உக்ரை மீது மூன்றாவது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடத

Mar04

உக்ரைனை ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில்

Mar04

உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யா

Feb27

உக்ரைன் மீது ரஷ்யா தற்போது பயங்கரமான தாக்குதலை நடத்தி

Feb28

ரஷ்ய ராணுவத்திடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் க

Feb11

மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உய

Feb28

உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிற நில

Mar09

உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத

Mar08

ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ

Feb27

உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக

Mar02

மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என

Feb26

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ந

Mar05

உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தற்போது உச்சம் பெற்றுள்ளது

Mar15

சுமார் 30,000 துருப்புகள் மற்றும் 50 போர்க்கப்பல்களுடன் ரஷ

Mar03

உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 7வது நாளாக ஆக்ரோஷமான தாக்கு