பிரபலங்கள் மீடியாவில் ஒரு வார்த்தை தவறாக பேசினாலே அது மிகப்பெரிய அளவில் பிரச்சனையில் கொண்டு சென்று விட்டுவிடும். நடிகர் அஸ்வினுக்கு ஸ்லீப்பிங் ஸ்டார் என பெயர் வந்ததும், அவரது முதல் படத்தை பார்த்து தியேட்டரில் தூங்கிவிட்டோம் என அனைவரும் ட்ரோல் செய்ததற்கும் என்ன காரணம் என எல்லோருக்கும் தெரியும். மேடையில் அவர் பேசியது தான் இத்தனை ட்ரோல்களுக்கு காரணம்.
இது போல தற்போது வலிமை படம் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் சீரியல் நடிகை ஸ்ரீநிதி. வலிமை படத்தில் சின்ன ரோலில் நடித்திருக்கும் சைத்ரா ரெட்டி அவரது நெருக்கமான தோழி தான். படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த அவரிடம் மீடியாகாரர்கள் படம் எப்படி இருந்தது என கேட்க "அஜித் சார் கியூடாக நடித்து இருக்கிறார். படம் ஓடுவதை விட பைக் தான் அதிகம் ஓடுகிறது" என ஸ்ரீநிதி கூறினார்.
இதனால் கோபமான அஜித் ரசிகர்கள் ஸ்ரீநிதியை இன்ஸ்டாகிராமில் வறுத்தெடுத்தனர். இதனால் கலக்கத்துடன் ஸ்ரீநிதி லைவ் வீடியோவில் பேசி இருக்கிறார்.
"நான் காசு கொடுத்து படம் பார்த்தேன். படம் எப்படி இருக்கிறது என சொல்ல கூட கருத்து சுதந்திரம் இல்லையா. நான் விஜய் ரசிகை என்பதால் தான் இப்படி சொன்னேன் என கூறுகிறார்கள். நான் நிஜத்தில் சிம்பு ரசிகை."
"அஜித்தை பற்றி நான் தவறாக பேசவில்லை. படத்தை பற்றி தான கூறினேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் ஜாலியாக சொன்ன கருத்து இவ்வளவு சீரியசாகும் என நினைக்கவில்லை."
"அஜித் ரசிகர் என்றால் பெண்களை அசிங்க அசிங்கமாக பேசுவீர்களா" என சொல்லி கமெண்டில் வந்த சில தகாத வார்த்தைகளை சொல்லி இருக்கிறார் ஸ்ரீநிதி.
"நான் பேசியதில் எந்த தவறும் இல்லை. அதற்காக மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது" எனவும் உறுதியாக கூறி இருக்கிறார்.