ரஷ்யா - உக்ரைன் மோதல் தொடர்ந்து இன்று 3 ஆவது நாளாக போர் பதற்றம் நீடிக்கிறது. இரு தரப்பிலும், போரை முன்னிட்டு ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், வீரர்களின் உயிரிழப்பு பற்றியும் தகவல் வெளிவருகின்றன.
ரஷிய படைகள் தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி முன்னேறி வருகின்றன. இந்த நிலையில் , உக்ரைன் தலைநகர் கீவ்-வை பாதுகாக்க உக்ரைன் மக்கள் ஆயுதங்களுடன் வலம்வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் உக்ரைனின் ஆண்களும், பெண்களும் குழுக்களாக ஆயுதங்களுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை கீவ் நகரில் வலம் வந்த ரஷ்ய ராணுவ வாகனங்கள் மீது பாட்டில் குண்டுகளை உகிரேனிய மக்கள் வீசியெறிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.