உக்ரை மீது மூன்றாவது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், அங்கிருந்து உக்ரைன் ஜனாதிபதியை அந்த நாட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு அமெரிக்கா முன்வந்தது.
எனினும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) அதனை நிராகரித்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்கு மோதல்கள் இடம்பெறுகின்றன,எனக்கு வெடிமருந்துகளே தேவை என்றும் பயணங்கள் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளாக கூறப்படுகின்றது.
இந்த விடயத்துடன் நேரடியாக தொடர்புபட்ட புலனாய்வு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் ஜனாதிபதிக்கு உதவுவதற்கு அமெரிக்கா தயாராகயிருப்பதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இதேவேளை ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்கொண்ட விதத்திற்காக உக்ரைன் ஜனாதிபதிக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
முன்னர் நகைச்சுவை நடிகராகயிருந்து ஜனாதிபதியான ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy)தனது படையினரை ஊக்குவித்து தற்போது உரையாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.