நேற்று வெளியான அஜித்தின் வலிமை படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் ஸ்டண்ட் காட்சிகளுக்கு பாராட்டு கிடைத்து வருகிறது. தற்போது முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் 36.17 கோடி ருபாய் வசூலித்த முந்தைய சாதனைகளை தகர்த்து இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் வந்த வசூல் விவரம் வெளிவந்து இருக்கிறது. USA ப்ரீமியரில் சுமார் $140k வசூலித்து இருக்கிறது வலிமை.
இது விவேகம் படத்தை விட குறைவு தான். அந்த படம் ப்ரிமியரில் $213K வசூலித்தது குறிப்பிடத்தக்கது. வலிமை இதை விட மிக குறைந்த அளவு வசூலித்து இருப்பதால் USA பிரீமியர் டாப் 10 வசூல் லிஸ்டில் இடம்பிடிக்க தவறி இருக்கிறது. அதில் விவேகம் தான் முதலிடத்தில் இருக்கிறது.
நல்ல விமர்சனம் கிடைத்து வருவதால் வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில் அதிகரிக்கும் என தெரிகிறது.