உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவின் எல்லையான உக்ரைனின் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளில் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக உக்ரைன் ராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர். இந்த நிலையில், ரஷ்ய படைகள் கிராமடோர்ஸ்க், டினிர்ப்ரோ ஆகிய பகுதிகளில் நுழைந்தன. இதேபோல், ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் கார்கிவ் பகுதியில் ரஷ்யா ராணுவம் உள்ளது.
கருங்கடலில் இருந்து ஒடெசா, கெர்சன் மற்றும் மரியுபோல் ஆகிய இடங்களிலும் ரஷ்யா குண்டுவீச்சுகளை நடத்தி வருகிறது. இதேபோல், அண்டை நாடான ருமேனியா மற்றும் பெலாரஸுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் உக்ரைனில் உள்ள இவானோ ஃபிராங்கிவ்ஸ்க், செர்னிஹிவில் தாக்கப்பட்டது. அமெரிக்க ராணுவ தளம் ஒன்றின் மீது குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.