More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழில் இடைநடுவில் புகுந்து எரிபொருள் பெற முயன்ற அமைச்சர்களின் வாகனங்கள்: எரிபொருள் நிலையத்தில் பதற்றநிலை
யாழில் இடைநடுவில் புகுந்து எரிபொருள் பெற முயன்ற அமைச்சர்களின் வாகனங்கள்: எரிபொருள் நிலையத்தில் பதற்றநிலை
Apr 01
யாழில் இடைநடுவில் புகுந்து எரிபொருள் பெற முயன்ற அமைச்சர்களின் வாகனங்கள்: எரிபொருள் நிலையத்தில் பதற்றநிலை

யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் பனை தென்னை வள உற்பத்தி கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னான்டோ ஆகியோரின் வாகனங்களிற்கு இடையில் புகுந்து எரிபொருள் பெற முயன்றமையினால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.



இரு அமைச்சர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்தபோது ஐந்து வாகனங்களில் வருகை தந்திருந்தனர். திரும்பிச் செல்வதற்காக வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு வருகை தந்தனர்.



இதன்போது குறித்த எரிபொருள் விற்பனை நிலையத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையில் காத்திருந்தபோது அமைச்சரின் வாகனத்திற்கு உடனடியாக டீசல் கொள்கலனை முழுமையாக நிரப்ப முயன்றனர்.



இதன்போது எரிபொருளிற்காகக் காத்திருந்த வாகன உரிமையாளர்கள் "உங்களால் தான் நாம் வரிசையில் நிற்கின்றோம். கொலைகாரப் பாவிகளா, இந்த நிலைமையில் எமக்கு 3 ஆயிரத்திற்கு மட்டுமே டீசல், கொலைகாரரிற்கு முழுமையாகக் கேட்கிறதா, அடிக்க முடியாது என கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.



இதன்போது சம்பவத்தைச் செய்தியாக்கிய ஊடகவியலாளரையும் அமைச்சரின் உதவியாளர் படம்பிடித்து அச்சுறுத்தியதோடு, மக்களிடம் நீண்ட தர்க்கத்தில் ஈடுபட்டு அரை மணி நேரத்தின் பின்பு 11 ஆயிரத்து 200 ரூபாவிற்கு டீசலை நிரப்பி வெளியேறினர்.



இதன்போது மக்கள் "இவர்களால் வாழவும் முடியவில்லை, நிம்மதியாகச் சாகவும் முடியவில்லை, அதேநேரம் எரிபொருளும் இல்லை, மின்சாரமும் இல்லாத நேரத்தில் 50 சதத்திற்குப் பிரயோசனம் இல்லாமல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகின்றனர் என தமது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர்.



Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb07

கொரோனா தொற்றினால் உயிரிழந்த வைத்தியர் கயான் டந்தநாரா

Mar27

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தின

Feb02

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி

Jan27

இலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை

May01

உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந

Jan27

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே

Oct13

பொதுநலவாய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இலங்கை பிரதி

May26

குருணாகலில் ரயில் மோதும் நிலையில் சென்ற மாணவனை காப்பா

Mar14

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாட்டின் உயர்மட்ட ப

May20

பொதுச் செலவினங்களை எளிதாக்கும் நோக்கில், அரசாங்கத்தி

Apr04

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்போது

Apr03

12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் வில

Mar05

பிங்கிரிய போவத்தை பகுதியில் மனித எச்சங்களுடன் மோட்டா

Mar03

டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் த

Mar01

இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்க