நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய அவர்களது இல்லம் அமைந்துள்ள வீதியான மிரிஹான பகுதியில் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்பாட்டத்தின்போது விசேட அதிரடிப் படையினர் ஆர்பாட்டத்தைக் கட்டுப்படுத்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதன்போது தாக்குதலில் ஊடகவியலாளர்கள் சிலர் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயமடைந்தனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்தவர்களில் 5 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.